உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அப்போலோ புரோட்டான் மருத்துவர் வரும் 24ம் தேதி புதுச்சேரியில் முகாம்

அப்போலோ புரோட்டான் மருத்துவர் வரும் 24ம் தேதி புதுச்சேரியில் முகாம்

புதுச்சேரி : சென்னை அப்போலோ புரோட்டான் புற்றுநோயியல் சிறப்பு மருத்துவர் நாளை மாறுநாள் 24ம் தேதி புதுச்சேரியில் ஆலோசனை வழங்குகிறார். புதுச்சேரி ராஜிவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை எதிரில் உள்ள, அண்ணா நகர், எண் 2, 14வது குறுக்கு தெருவில், அப்போலோ புரோட்டான் தகவல் மையம் இயங்கி வருகிறது. இம் மையத்தில் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் சிறப்பு மருத்துவர் பிரியா கபூர், நாளை மறுநாள் 24ம் தேதி, காலை 11:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை ஆலோசனை வழங்குகிறார்.முகாமில், மகளிர் கருப்பை புற்றுநோய், பிறப்புறுப்பு புற்றுநோய், கதிரியக்க சிகிச்சைக்கு பின் ஏற்படும் மறு நிகழ்வுகளை தவிர்க்க அறுவை சிகிச்சை, கர்ப்பபை வாய் புற்றுநோய், சினைப்பை புற்றுநோய், நிணநீர் முனை அகற்றுதல், பிறப்புறுப்பு கட்டிகள், ரோபோடிக் கருவுறுதலை பாதுகாத்தல் மற்றும் நரம்புகளை காப்பாற்றும் நடைமுறைகள் உள்ளிட்ட நோய்களுக்கு ஆலோசானை வழங்குகிறார். மருத்துவரிடம் ஆலோசனை பெற முன்பதிவிற்கு 99430 99523, 72000 34137 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை