உள்ளூர் செய்திகள்

4 பேர் மீது வழக்கு

பாகூர் : பாகூரை சேர்ந்தவர் பிரசாத்குமார், 30; அரங்கனுாரில் வெல்டிங் ஒர்க்ஷாப் வைத்துள்ளார். இவரும், நிர்ணயப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசனும், வைக்கோல் வியாபாரம் செய்து வந்துள்ளனர்.இதில், பிரச்னை ஏற்பட்டதால், வியாபாரத்தை நிறுத்தி விட்டனர். கடந்த 30ம் தேதி மாலை, பிரசாத்குமார், தனது உறவினர்களான ஹரிஷ், ராம் ஆகியோருடன் ஒர்க்ஷாப்பில் பேசிக் கொண்டிருந்தார்.அங்கு நண்பர்களுடன் வந்த வெங்கடேசன், பிரசாத்குமாரை ஆபாசமாக திட்டி, தகராறு செய்தார். இரும்பு பைப்பால், பிரசாத்குமாரையும், ஹரிஷையும் தாக்கினர்.காயமடைந்த இருவரும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பாகூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை