உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தம்பதி மீது தாக்குதல் மூவர் மீது வழக்கு

தம்பதி மீது தாக்குதல் மூவர் மீது வழக்கு

பாகூர் -தம்பதியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த மூவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.பாகூர், பத்மினி நகரச் சேர்ந்தவர் கந்தன் மனைவி திலகவதி, 50; வீட்டில் பசுமாடுகள் வைத்து, பால் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 12ம் தேதி மேய்ச்சலுக்கு சென்ற கால்நடைகளை வீட்டிற்கு ஓட்டி வர சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவாவின் மகன் விஷ்வா என்பவர் ஓட்டிச் சென்ற கார், திலகவதி மீது மோதியதில், கீழே விழுந்து காயமடைந்தார். பாகூர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று, பின், கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.இது தொடர்பாக, இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த விஷ்வா, அவரது தம்பி சுரேஷ், தாய் வள்ளி மூவரும் சேர்ந்து, கந்தனையும், அவரது மனைவி திலகவதியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயமடைந்த கந்தன் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.கந்தன் கொடுத்த புகாரின் பேரில், விஷ்வா உட்பட மூவர் மீது பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ