உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குடும்ப பிரச்னை 2 தரப்பினர் மீது வழக்கு

குடும்ப பிரச்னை 2 தரப்பினர் மீது வழக்கு

புதுச்சேரி: குடும்ப பிரச்னையில், இரு தரப்பினர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குயவர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார், 48, இவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருக்கும் ,இவரது இரண்டாவது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், குழந்தைகளை பார்க்க சசிக்குமார் லாஸ்பேட்டை அருகே உள்ள மாமியார் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்றார்.அப்போது ,சசிக்குமாருக்கும் அவரது மனைவின் உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரின் புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ