உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தம்பிக்கு கொலை மிரட்டல் அண்ணன் மீது வழக்கு

 தம்பிக்கு கொலை மிரட்டல் அண்ணன் மீது வழக்கு

புதுச்சேரி: சொத்து பிரச்னையில் தம்பியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த, அண்ணன் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். தேங்காய்த்திட்டை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி,42; ஆட்டோ டிரைவர். இவருக்கும், இவரது அண்ணன் சத்தியசீலன், 45, என்பவருக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்து வருகிறது. தட்சிணாமூர்த்தி, கடந்த 25ம் தேதி, தாயிடம் சொத்து தொடர்பாக பேசினார். அப்போது, அவர்களுக்கிடையே பிரச்னை ஏற்பட்டது. ஆத்திரமடைந்த, சத்தியசீலன் அவரது தம்பி தட்சிணாமூர்த்தியை இரும்பு பைப்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி