மேலும் செய்திகள்
மருமகளை தாக்கிய மாமியார் மீது வழக்கு
21-Jun-2025
புதுச்சேரி: பெண்ணை தாக்கிய நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி புதிய சாரம் தென்றல் நகர் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் புருஷோத் ரமேஷ். இவரது மனைவி புருஷோத் சாந்தகுமாரி 50, இவர்கள் திருமணத்துக்கு பிறகு தம்பதியினர் பிரான்சில் வசித்து வந்தனர்.அங்கு கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சாந்தகுமாரி கணவரிடம் கோபித்துக்கொண்டு புதுச்சேரியில் உள்ள தனது அண்ணன் ரமேஷ்குமார் வீட்டில் கடந்த 17 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.இதனிடையே சாந்தகுமாரி கடந்த 24 -ந் தேதி பாரதி வீதியில் உள்ள கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்த கணவரின் மூத்த சகோதரர் புருஷோத் பிரபாகரன், சகோதரிகள் புருஷோத் சகுந்தலா, திலாஸ், லலிதா ஆகியோர் சாந்தகுமாரியை தகாத வார்த்தைகளால் திட்டி, அவரை அடித்து உதைத்தனர்.சாந்தகுமாரி புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
21-Jun-2025