இளம்பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு
புதுச்சேரி: தோழியுடன் ஸ்கூட்டியில் சென்ற இளம்பெண்ணை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். கருவடிக்குப்பம், பொன்னியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் அப்பர். இவரது மகள் சவுந்தர்யா, 19; நேற்று முன்தினம் தனது தோழியுடன் லாஸ்பேட்டை மெயின் ரோடு வழியாக ஸ்கூட்டியில் சென்றபோது, எதிர்திசையில் பைக்கில் வந்த மடுவுப்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் ஸ்கூட்டியை மோதுவதுபோல் சென்றுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின், அங்கிருந்து சென்ற சவுந்தர்யாவை, பைக்கில் பின்தொடர்ந்து சென்ற மணிகண்டன், இ.சி.ஆர்., லதா ஸ்டீல் அருகே வழிமறித்து, திட்டி கையால் தாக்கியுள்ளார். சவுந்தர்யா புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.