உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அனுமதியின்றி பேனர் 2 பேர் மீது வழக்கு பதிவு

அனுமதியின்றி பேனர் 2 பேர் மீது வழக்கு பதிவு

புதுச்சேரி : காலாப்பட்டு இ.சி.ஆரில் அனுமதியின்றி பேனர் வைத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.காலாப்பட்டு, இ.சி.ஆர் மெயின் ரோட்டில் அனுமதி பெறாமல் போக்குவரத்திற்கு இடையூராகவும், நடைப்பாதையை ஆக்கிரமித்தும் நேற்று முன்தினம் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.ரோந்து பணியில் ஈடுபட்ட காலாப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார், பேனர் வைத்த பெரிய காலாப்பட்டை சேர்ந்த நிரஞ்சன், 28; மீது வழக்குப் பதிந்தனர்.இதேபோல், முத்தியால்பேட்டை மகாத்மா காந்தி வீதியில் அனுமதியின்றி போக்குவரத்திற்கு இடையூறாக காதணி விழா டிஜிட்டல் பேனர் வைத்திருந்த முத்தியால்பேட்டை, சோலை நகர், சிங்காரவேலன் வீதியை சேர்ந்த சுதர்ஷன் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை