உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கொட்டிலை உடைத்து மாடுகள் மீட்பு உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு

கொட்டிலை உடைத்து மாடுகள் மீட்பு உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு

புதுச்சேரி : நகராட்சி கொட்டிலை உடைத்து மாடுகளை மீட்டு சென்ற உரிமையாளர்கள் 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்தனர்.புதுச்சேரி நகரப் பகுதியில் சுற்றித் திரியும் மாடுகளால் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதையொட்டி, சாலைகளில் மாடுகளை திரிய விட்டால் அபராதம் விதிக்கப்படும் என, நகராட்சி நிர்வாகம் எச்சரித்தது.இதை மீறியும் ஆங்காங்கே நகரப் பகுதியில் மாடுகள் உலா வந்ததால் விபத்துக்கள் ஏற்பட்டது.இதையெடுத்து நகராட்சி அதிகாரிகள் உத்தரவின் பேரில், சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்து, கம்பன் கலையரங்கம் பின்புறம் உள்ள கொட்டிலில் கட்டி வைத்திருந்தனர். 12 மாடுகள், 2 கன்றுகள் அடைக்கப்பட்டிருந்தன.இந்நிலையில், கடந்த 24ம் தேதி மர்ம ஆசாமிகள், கொட்டிலில் கதவை உடைத்து மாடுகளை பிடித்து சென்றனர். இது குறித்து நகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் (பொ) வெங்கடேசன், ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், மாடுகளின் உரிமையாளர்கள் புதுச்சேரி குபேர் வீதியை சேர்ந்த பிரபாகரன், அங்காளம்மன் நகரை சேர்ந்த ராஜா உள்ளிட்ட மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை