உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விளம்பர போர்டு வைத்தவர் மீது வழக்கு பதிவு

விளம்பர போர்டு வைத்தவர் மீது வழக்கு பதிவு

பாகூர்: புதுச்சேரி - கடலுார் சாலையில் போக்குவரத்து இடையூராக சாலைகளை ஆக்கிரமித்து பேனர்கள், விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். விபத்துக்களை தடுக்கும் வகையில், போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஏட்டு ரகுபதி மற்றும் போலீசார் அரியாங்குப்பத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, மாதா கோவில் - அரியாங்குப்பம் சிக்னல் சாலையில், போக்குவரத்திற்கு இடையூறக வைக்கப்பட்டிருந்த டிபன் கடை ஒன்றின் விளம்பர பலகையை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்த புகாரின் பேரில், கடையின் உரிமையாளரான காக்காயந்தோப்பு பகுதியை சேர்ந்த அய்யனாரப்பன், 55; என்பவர் மீது கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை