பிடாரி அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி
வில்லியனுார் : திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, பிடாரி அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது.வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ தேர் திருவிழா அடுத்த மாதம் (ஜூன்) 8ம் தேதி நடக்கிறது. தேர் திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் உள்ள பிடாரி அம்மனுக்கு நேற்று மாலை 6:00 மணியளவில் சிறப்பு அபிஷேகம், 8:00 மணியளவில் அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி, தீபாராதனை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.தொடர்ந்து 29ம் தேதி வரையில் எட்டு நாட்கள் பிடாரி அம்மன் உற்வம் நடக்கிறது. அதில் 29ம் தேதி பிடாரி அம்மன் ரத உற்சவம், 30ம் தேதி விநாயகர் உற்சவம், 31ம் தேதி இரவு 8:30 மணியளவில் தேர் திருவிழா பிரம்மோற்சவ கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து 13 நாட்கள் நடக்கும் உற்சவத்தில், ஜூன் 8ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி காமேஷ்வரன், சிவனடியார்கள், சிவாச்சார்யர்கள் மற்றும் உற்சவ மரபினர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.