உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து பயிற்சி பெற்ற போலீசாருக்கு சான்றிதழ்

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து பயிற்சி பெற்ற போலீசாருக்கு சான்றிதழ்

புதுச்சேரி : கோரிமேட்டில் நடந்த போலீஸ் அதிகாரிகளுக்கான புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்கள் குறித்த சிறப்பு பயிற்சியில் பங்கேற்ற போலீசாருக்கு டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் சான்றிதழ் வழங்கினார். மத்திய அரசின் புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்களை கையாள்வது குறித்து அனைத்து மாநில காவல்துறை அதிகாரிகளுக்கு டில்லி போலீஸ் ஆராய்ச்சி மற்றும் திட்ட நிறுவனம் சார்பில், சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, புதுச்சேரி போலீஸ் துறையை சேர்ந்த எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்கர்கள் என, 73 அதிகாரிகளுக்கு கோரிமேடு போலீஸ் பயிற்சி பள்ளியில் கடந்த 3 நாட்களாக புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்கள் குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. டில்லி போலீஸ் ஆராய்ச்சி மற்றும் திட்ட நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் மதன்குப்தா போலீசாருக்கு பயிற்சி அளித்தார். தொடர்ந்து, பயிற்சி முடித்த அதிகாரிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் கலந்து கொண்டு, சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இதில், குற்றம் மற்றும் புலனாய்வு பிரிவு சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி மற்றும் எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை போலீஸ் பயிற்சி பள்ளி எஸ்.பி., ரங்கநாதன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை