மேலும் செய்திகள்
சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் மஞ்சள் நீர் உற்சவம்
3 hour(s) ago
ஓய்வூதிய திட்டம் குறித்து விளக்கம்
7 hour(s) ago
ஜிப்மரில் நாளை மறுதினம் பட்டமளிப்பு விழா
7 hour(s) ago
புதுச்சேரி : நான்கு வழி சாலை பணி காரணமாக எம்.பி.பி.எஸ்.,தேர்வு மையங்களை பல்கலைக்கழகம் மாற்றியுள்ளது.புதுச்சேரி பல்கலைக்கழகம் இம்மாதம் இறுதியில் நான்காம் ஆண்டு எம்.பி.பி.எஸ்.,இறுதி தேர்வும்,அதை தொடர்ந்து மார்ச் 5ம் தேதி முதல் மூன்றாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., தேர்வும் நடத்தப்படும் என அறிவித்த.இதற்கான தேர்வு மையங்களாக அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி,மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரி அறிவிக்கப்பட்டன..ஆனால் புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலை நான்கு வழி சாலையாக மாற்றப்படுவதால்,புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி செல்லும் பைக்குகள்,கார்கள்,பஸ்கள்,இதர போக்குவரத்து வாகனங்கள்,கண்டமங்கலத்தில் இருந்து மதகடிப்பட்டு வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் இந்த இரண்டு தேர்வு மையங்களிலும் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் சிக்கலை எதிர் கொண்டனர். எனவே மருத்துவ மாணவர்கள் தங்கு தடையின்றி தேர்வினை எழுதும் வகையில் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி,புதுச்சேரி பல்கலைக்கழகம்,கோரிமேடு மதர்தெரசா பட்ட மேற்படிப்பு மையங்களை தேர்வு மையங்களாக மாற்றி அமைத்து புதுச்சேரி பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது.இது தொடர்பாக பரிசீலனை செய்த புதுச்சேரி பல்கலைக்கழகம், தேர்வு மையங்களை மாற்றியுள்ளது. இதன்படி வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி இரண்டாம்,மூன்றாம்,நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரி தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் பிம்ஸ் மருத்துவ கல்லுாரியில் மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரி மாணவர்கள் எம்.பி.பி.எஸ்.,தேர்வு எழுவதற்கு அனுமதி அளித்துள்ளது.
தேர்வு மையங்களை மாற்றியதற்காக புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு மாணவர் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன.புதுச்சேரி மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில்,மருத்துவ மாணவர்களின் சிரமங்களை ஏற்று தேர்வு மையங்களை மாற்றிய புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
3 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago