தாகூர் கலை கல்லுாரியில் வேதியியல் சங்கத் தினம்
புதுச்சேரி: புதுச்சேரி தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வேதியியல் சங்கத் தினம் நேற்று நடந்தது. வேதியியல் துறை தலைவர் பாலமுருகன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கருப்பசாமி தலைமை தாங்கினார். போலீஸ் எஸ்.பி., மாறன் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். துறை பேராசிரியர்கள் அஜய்குமார் குப்தா, வெங்கடசாமி, கனிமொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாணவர் பிரதிநிதி தலைவராக வேதியியல் துறை மாணவர் கீர்த்திகுமார், செயலாளராக கமல்ராஜ் தேர்வு செய்யப்பட்டனர்.