உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வீல் சேர் கூடைப்பந்து போட்டியில் வென்ற அணிக்கு முதல்வர் வாழ்த்து

வீல் சேர் கூடைப்பந்து போட்டியில் வென்ற அணிக்கு முதல்வர் வாழ்த்து

புதுச்சேரி: தென்மண்டல அளவிலான வீல் சேர் கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற புதுச்சேரி பெண்கள் அணியினர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்திய சக்கர நாற்காலி கூடைப்பந்து கூட்டமைப்பு சார்பில், தென்மண்டல வீல் சேர்கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி, கோயம்புத்துாரில் நேற்று முன்தினம் நடந்தது. பல்வேறு சுற்றுகளாக நடந்த போட்டிகளில், பெண்கள் பிரிவில் கேரளா, புதுச்சேரி அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறின. இறுதி போட்டியில் கேரளா அணியை விழ்த்தி, புதுச்சேரி அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் வரும் 1ம் தேதி துவங்கி 10ம் தேதி வரை நடக்கும் தேசிய அளவிளான போட்டியில் பங்கேற்கும் தகுதியை புதுச்சேரி பெண்கள் அணி பெற்றது. இதையடுத்து, புதுச்சேரி பெண்கள் அணியினர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து, முதல்வர் ரங்கசாமி தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க குவாலியர் செல்வதற்கான விமான பயணச் செலவை அரசே ஏற்கும் என, உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை