உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஓவியப்போட்டி பரிசளிப்பு

கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஓவியப்போட்டி பரிசளிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி ஓவியப் பள்ளி சார்பில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு மாணவர்களுக்கு ஓவியப் பள்ளி வளாகத்தில் கிறிஸ்துமஸ் குறித்த ஓவியப்போட்டி நேற்று நடந்தது.ஓவியப் பள்ளி நிர்வாகி செல்வம் எமில் வரவேற்றார். அருட்தந்தை அந்தோணிசாமி முன்னிலை வகித்தார். ஓவியம் வரைவதற்கான காகிதத்தை அருட்சகோதரி மோட்சை ராகினி வழங்கினார். ஓவியப் பள்ளியின் நிறுவனர், போட்டி குறித்த விதிகளை கூறினார். போட்டியில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 70 மாணவர்கள் கலந்து கொண்டனர். சிறப்பாக ஓவியம் வரைந்த 10 மாணவர்களுக்கு முதல் பரிசும், 10 மாணவர்களுக்கு 2ம் பரிசும் வழங்கப்பட்டது. எஸ்.பி.ஐ.யின், முன்னாள் தலைமை மேலாளர் பாலவேணி உட்பட பலர் பங்கேற்றனர். மூத்த ஓவிய ஆசிரியர் ராமலிங்கம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி