| ADDED : பிப் 25, 2024 04:13 AM
புதுச்சேரியும், தமிழகமும், கலாசாரம், மொழி, பண்பாட்டு ரீதியாக பின்னி பிணைந்துள்ளன. புதுச்சேரி எல்லையில் அமைந்துள்ள சில ஊர்கள், தமிழக பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த பார்டர்களில் குடிமகன்கள் தொல்லை சமீபகாலமாக அதிகரித்துள்ளது.தமிழக குடிமகன்கள் மதுவை வாங்கி வந்து புதுச்சேரி எல்லைக்குள் உள்ள பகுதிகளில் குடிக்கின்றனர். அதுபோல, புதுச்சேரி குடிமகன்களோ தமிழக எல்லைக்குள் கும்பலாக மது அருந்துகின்றனர்.இரு மாநில எல்லைகள் சங்கமிக்கும் பகுதிகளில் குடியிருப்புகளுக்கு மத்தியில் இரவில் மட்டுமின்றி பட்டப் பகலிலேயே சாலைகளில் அமர்ந்து கும்பலாக குடிக்கின்றனர். அவ்வழியாக பெண்கள் செல்ல முடியவில்லை.அப்படியே குடிமகன்களை விரட்டினாலும், உங்கள் எல்லையில் நாங்கள் குடிக்கவில்லை என, இரு மாநில போலீசாரிடமே ரூல்ஸ் பேசுகின்றனர். வேறு வழியின்றி போலீசாரும் அமைதியாக அங்கிருந்து நகர்ந்து போய் விடுகின்றனர். பார்டர்களை இரு மாநில போலீசாரும் இணைந்து கண்காணித்தால், குடிமகன்களின் அட்டகாசமும், குற்றங்களும் குறையும்.