மேலும் செய்திகள்
ஆசிரியர் தின விழா; பள்ளிகளில் கொண்டாட்டம்
05-Sep-2025
பாகூர்: ஆதிங்கப்பட்டு அரசு பள்ளியில், துாய்மையே சேவை இருவார துாய்மை விழாவையொட்டி நடந்த விழிப்புணர்வு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆதிங்கப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில், துாய்மை சேவை இருவார துாய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், மாணவர்கள் இடையே வினாடி வினா, கவிதை, ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல் மற்றும் முழக்கம் எழுதுதல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் நான்சி ஏஞ்சலின், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். தமிழாசிரியர் ரகுநாதன் தொகுப்புரையாற்றினார். முன்னதாக, ஒரே பாரதம் உன்னத பாரதம் நிகழ்ச்சியின் இம்மாத நிகழ்வாக டையூ டாமன் கலாசார நிகழ்வாக அப்பகுதி இசையுடன் கூடிய பாடலினை மாணவர்கள் பாடி, குஜராத் மாநிலத்தின் நாட்டுப்புற கதைகளை கூறினர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.
05-Sep-2025