மேலும் செய்திகள்
தென்னிந்திய அளவில் கால்பந்து போட்டி
3 hour(s) ago
மாஜி பெண் அமைச்சருடன் நடிகை ரோஜா திடீர் சந்திப்பு
3 hour(s) ago
நர்ஸ் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
3 hour(s) ago
சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து
3 hour(s) ago
பாகூர்: மத்திய அரசின் ‘தூய்மையே சேவை – 2026’ இயக்கத்தின் கீழ், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், குருவிநத்தம் கிராமத்தில், துாய்மை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். ஆசிரியை கோமளா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம் கலந்து கொண்டு, துாய்மை விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். உதவிப் பொறியாளர் பாலமுருகன், இளநிலைப் பொறியாளர் ஐயப்பன் முன்னிலை வகித்தனர். பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் துணை தலைவர் தவமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர். பள்ளியில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் மாணவர்கள் பங்கேற்று, குருவிநத்தம் மாட வீதிகளின் வழியாக துாய்மை விழிப்புணர்வு முழக்கமிட்டு, பொதுமக்களிடம் துண்டறிக்கைகளை வழங்கினர். ஏற்பாடுகளை, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஹெச்.ஆர். ஸ்கொயர் ஊழியர்கள் செய்திருந்தனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago