கடலோர காவல் படை அதிகாரிகள் முதல்வர் ரங்கசாமி சந்திப்பு
புதுச்சேரி: இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் அக்வான் புயல் முன்னெச்சரிக்கை குறித்து முதல்வர் ரங்கசாமியிடம் விளக்கினர். இந்திய கடலோர காவல்படை புதுச்சேரி மற்றும் மத்திய தமிழக பகுதியின் கமாண்டர், டி.ஐ.ஜி., டஸிலா, முதல்வர் ரங்கசாமியை சட்டசபையில் இன்று (நவ.,17) மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இச்சந்திப்பில், கடலோர காவல் படை அதிகாரிகள் எதிர்வரும் அக்வான் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் இந்திய கடலோர காவல்படையின் பிரத்யேக கட்டணமில்லா தேடல் மற்றும் மீட்பு கடல்சார் உதவி எண் 1554 குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் கமாண்டர் டி.ஐ.ஜி., டஸிலா முதல்வர் ரங்கசாமியிடம் எடுத்துக் கூறினார்.