உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எம்.ஐ.டி., கல்லுாரியில் வகுப்புகள் துவக்க விழா

எம்.ஐ.டி., கல்லுாரியில் வகுப்புகள் துவக்க விழா

புதுச்சேரி : புதுச்சேரி கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியில் (எம்.ஐ.டி.) 18 ம் ஆண்டு முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு, மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் மலர்க்கண் வரவேற்றார். செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம், ட்ரஸ்ட்டி நிலா பிரியதர்ஷினி ஆகியோர் கருத்துரை வழங்கினர். தலைமை விருந்தினர்களாகதொழில் ஆலோசகர் மற்றும் ஆய்வாளர் ஜெயப்ரகாஷ் காந்தி, சென்னை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) நிறுவன மனித வள கல்வி கூட்டணி குழு பிராந்திய தலைவர் ரவிக்குமார் மூர்த்தி, சிறப்பு விருந்தினராக டி.சி.எஸ்., நிறுவன அதிகாரி திலீபன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் பேசுகையில், ஐ.டி., துறையில் தொழில் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பல்கலைக்கழகங்கள் சான்றிதழ்கள் வழங்கினாலும், நம் திறமைகளை மேம்படுத்த சுய கற்றல், சுற்றுச்சூழல் அனுபவம் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல் அவசியம். கேள்விகள் கேட்பது, படைப்பாற்றல் வளர்த்தல் முக்கியம். முதலாமாண்டு துவங்கும் இங்கிருந்து, மாணவர்கள் பொறுப்பு ஏற்று கனவு காண்பதை நிறுத்தாமல் முன்னேற வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தை சேர்ந்த இயக்குனர்கள், கல்லூரி முதல்வர்கள், டீன்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். பேராசிரியர் சுமித்ரா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை