உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

தெரு விளக்கு எரியவில்லை

ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து மொரட்டாண்டி வரை தெரு விளக்கு எரியாமல் இருப்பதால், விபத்து நடந்து வருகிறது.திலகா, புதுச்சேரி.பாக்கமுடையான்பட்டு, உடையார் தெருவில், தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது. ஆசியகுமார், பாக்கமுடையான்பட்டு.

மழை நீர் வடியவில்லை

கரிக்கலாம்பாக்கம் செல்வ விநாயகர் நகரில் மழைநீர் தேங்கி நிற்பதால், குடியிருப்பவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். புண்ணியமூர்த்தி, கரிக்கலாம்பாக்கம்.

சாலையில் பள்ளம்

நைனார்மண்டபம் சாலையில், தோண்டி வைத்துள்ள பள்ளத்தால், போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.தரணி, புதுச்சேரி.

வாகன ஓட்டிகள் அச்சம்

காராமணிக்குப்பம் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மகேஷ், காராணிக்குப்பம்.

பகலில் எரியும் மின் விளக்குகள்

நைனார்மண்டபம் சுகாதார ஊழியர் குடியிருப்பு பகுதியில் பகல் நேரத்தில் தெரு விளக்கு எரிகிறது. ஒரு சில வீதிகளில் இரவில் தெருவிளக்கு எரியாமல் உள்ளது. வேல், நைனார்மண்டபம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ