மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
25 minutes ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
25 minutes ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
36 minutes ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
37 minutes ago
ஆரியப்பாளையம், சங்கராபரணி ஆற்று பாலத்தில் மங்கலம் சாலை பிரியும் இடத்தில் பாலம் மேற்பரப்பில் மெகா சைஸ் பள்ளம் உருவாகி உள்ளது.தட்சிணாமூர்த்தி,ஏம்பலம். சிக்னல் நேரம் நீட்டிக்க வேண்டும்
தட்டாஞ்சாவடி, ராஜிவ் டிராபிக் சிக்னலை இரவு 10:00 மணிக்கே நிறுத்தி விடுவதால், அதன் பின்பு கடும் போக்குவரத்து நெரிசலால் விபத்துகள் ஏற்படுகிறது. இரவு 11:00 மணி வரை சிக்னலை இயக்க வேண்டும்.விமல்ராஜ்,கோரிமேடு.குடியிருப்பு பகுதிக்குள் குப்பை கடலுார் சாலையில் முதலியார்பேட்டை ஏ.எப்.டி., மில் பஸ் நிறுத்தம் அருகே சாலையில் உள்ள குப்பைகளை அகற்றி, குடியிருப்பு பகுதிக்குள் கொட்டி செல்கின்றனர். ஸ்டாலின், முதலியார்பேட்டை. குப்பைகள் அகற்றப்படுமா?
புதுச்சேரி காந்தி சிலை எதிரில் உள்ள நேரு மேடை அருகே காலை நேரத்தில் குப்பைகள் சரிவர அகற்றப்படாமல் கிடக்கின்றன.சசிபாலன், புதுச்சேரி. குடிநீருக்கு அவதி
கடற்கரை சாலைக்கு வரும் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பது இல்லை.சிவக்குமார், புதுச்சேரி. தாறுமாறாக ஆட்டோக்கள் நிறுத்தம்
மறைமலையடிகள் சாலை, புதிய பஸ் நிலையம் எதிரில் சாலையில் தாறுமாறாக நிறுத்தும் விக்ரம் டெம்போ, ஆட்டோக்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.அலெக்ஸ்பாண்டியன், புதுச்சேரி. விபத்து அபாயம்
ரெட்டியார்பாளைம் ரத்னா ஸ்டோர் அருகே சாலையில் நாள் முழுதும் வாகனங்கள் நிறுத்தி வைப்பதால் விபத்து ஏற்படுகிறது.தருண், மூகாம்பிகை நகர். 'சப்வே' பணி மந்தம்
நுாறடிச்சாலை ரயில்வே மேம்பாலத்தின் கீழ் சப்வே அமைக்கும் பணி மந்தமாக நடந்து வருகிறது.பரணிதரன், முதலியார்பேட்டை. சாலை ஆக்கிரமிப்பு
எம்.என்.குப்பம் முதல் அரியூர் வரை, நான்கு வழிச்சாலையின் சர்வீஸ் சாலையில், வரிசையாக கிரேன், லாரி, குப்பை டிராக்டர், கார்கள் நிறுத்தி ஆக்கிரமித்துள்ளனர்.குமார், அரியூர்.
25 minutes ago
25 minutes ago
36 minutes ago
37 minutes ago