உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் முழு அடைப்பு விளக்க கருத்தரங்கம்

புதுச்சேரியில் முழு அடைப்பு விளக்க கருத்தரங்கம்

புதுச்சேரி: அனைத்து தொழிற்சங்கம் சார்பில், மே 20ம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. இதையடுத்து புதுச்சேரியில் முழு அடைப்பு விளக்க கருத்தரங்கம் சுதேசி மில் அருகில் நடந்தது.ஏ.ஐ.டி.யூ.சி., மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார். சி.டி.டி.யூ., மாநில செயலாளர் சீனுவாசன், ஐ.என்.டி.யூ.சி., மாநில பொதுச் செயலாளர் ஞானசேகரன், எல்.பி.எப்., மாநில அமைப்பாளர் அண்ணா அடைக்கலம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கருத்தரங்கில், புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர், ஒப்பந்த தொழிலாளர், திட்டம் சார்ந்த தொழிலாளர் உட்பட அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000 மாதத்திற்கு நிர்ணயம் செய்ய வேண்டும். ஒப்பந்த, தினக்கூலி, வெளிச்சந்தை முறை, பயிற்சியாளர் போன்ற ஊழியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் 9,000 மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை