மேலும் செய்திகள்
முன்விரோத தகராறு: 5 பேர் கைது
03-Nov-2024
புதுச்சேரி, : வேலைவாய்ப்பு துறை அதிகாரிக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.மாற்றுதிறனாளிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவு வேலைவாய்ப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் குணசேகரன் வரும் 30ம் தேதியுடன் பணி நிறைவு பெறுகிறார்.அதனையொட்டி ஊழியர்கள் சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா லாஸ்பேட்டை சமுதாய நலக்கூடத்தில் நடந்தது.நலவழித்துறை ஓஎஸ்டி மேரி ஜோஸ்பின் சித்தரா தலைமை தாங்கினார். ஜெயசந்திரன், செந்தில்குமார், இந்திரா, பிரியதர்ஷினி, லட்சுமிபிரியா, முருகதாஸ், திருமுருகன், ஷியாமலா உள்ளிட்டோர் பணி ஓய்வு பெறும் குணசேகரனின் கடந்த காலபணிகள் குறித்து நினைவு கூர்ந்து வாழ்த்தி பேசினர்.குணசேகரன் ஏற்புரையாற்றி நன்றி கூறினார்.
03-Nov-2024