உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோவிலில் கான்கிரீட் தளம் சரிந்து விழுந்ததால் பரபரப்பு

கோவிலில் கான்கிரீட் தளம் சரிந்து விழுந்ததால் பரபரப்பு

காரைக்கால்: திருப்பட்டினம் வரதராஜ பெருமாள் கோவிலில் கான்கிரீட் மேல்தளம் சரிந்து விழுந்ததால், பரபரப்பு நிலவியது. காரைக்கால், திருப்பட்டினம் மெயின்ரோட்டில் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த ஓராண்டாக புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் கோவிலின் மேல்தளத்தில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்தது. அப்போது திடீரென முட்டு மரங்கள் சரிந்து விழுந்தது. இதில் கோவில் மேல்தளம் கான்கிரீட் மற்றும் இரும்பு கம்பிகள் கீழே விழுந்தன. இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பட்டினம் இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி, சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். கோவில் புனரமைப்புப் பணிகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து கட்டுமான நிர்வாகிகளை போலீசார் விசாரித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை