உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பா.ஜ., சிறப்பு அழைப்பாளர் சபாநாயகருக்கு வாழ்த்து

 பா.ஜ., சிறப்பு அழைப்பாளர் சபாநாயகருக்கு வாழ்த்து

புதுச்சேரி: பிறந்தநாள் விழா கொண்டாடிய சபாநாயகர் செல்வத்திற்கு, பா.ஜ, மாநில சிறப்பு அழைப்பாளர் சந்திரமோகன் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பா.ஜ., மாநில சிறப்பு அழைப்பாளர் சந்திரமோகன் ஏற்பாட்டில், அரியாங்குப்பம் காலந்தோட்டம் முருகன் கோவில் வளாகத்தில் புதுச்சேரி சபாநாயகர் செல்வம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் அரியாங்குப்பம் தொகுதி பா.ஜ., தலைவர் வசந்தராஜ் மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அவரது பிறந்தநாளையொட்டி, முருகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. விழாவில் கலந்து கொண்ட சபாநாயகர் செல்வத்திற்கு, பா.ஜ., மாநில சிறப்பு அழைப்பாளர் சந்திரமோகன் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஏராளமானோருக்கு உணவு மற்றும் பெண்களுக்கு புடவை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ