உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரெஸ்டோபாரில் மாணவர் கொலை வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு காங்., வலியுறுத்தல்

ரெஸ்டோபாரில் மாணவர் கொலை வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு காங்., வலியுறுத்தல்

புதுச்சேரி : புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்கும் எண்ணம் பா.ஜ.,விற்கு இல்லை என முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பார்லிமென்டில் இரு தினங்களுக்கு முன்பு பதவி பறிப்பு சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. சட்டம் கொண்டு வந்து எதிர் கட்சிகளை மிரட்டும் வேலையில் மோடி அரசு செய்கிறது. இதற்கு, காங்., எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புதுச்சேரிக்கு, மாநில அந்தஸ்து கோரி 10 முறைக்கு மேல் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரங்கசாமி தேர்தல் அறிக்கையில் மாநில அந்தஸ்து பெறுவதே லட்சியம் என்றார். ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்தியிலும், மாநிலத்தில் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் பா.ஜ., தலைவர், முதல்வர், பிரதமரை சந்திக்க வேண்டும் என்கிறார். அப்படியெனில் சட்டசபை தீர்மானத்திற்கு என்ன மரியாதை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்கும் எண்ணம் பா.ஜ.,விற்கு இல்லை. 2026ல் இண்டி கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், மாநில அந்தஸ்தை வலியுறுத்தி பெறுவோம். ரெஸ்டோபாரில் சென்னை கல்லுாரி மாணவர் படுகொலை வழக்கில் உண்மைகள் மூடி மறைக்கப்படுகிறது. ரெஸ்டோ பாருக்கு வந்த பெண் யார். அவரை யார் சீண்டினர் என்பதை டி.ஐ.ஜி., தெரிவிக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் உள்ள ரெஸ்டோ பார்களை மூட வலியுறுத்தியும், சென்னை கல்லுாரி மாணவர் கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரணை கோரி கவர்னரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். தேவைப்பட்டால், காங்., சார்பில் நீதிமன்றத்தை நாடுவோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை