உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  நெல்லித்தோப்பு தொகுதியில் காங்., பாதயாத்திரை பிரசாரம்

 நெல்லித்தோப்பு தொகுதியில் காங்., பாதயாத்திரை பிரசாரம்

புதுச்சேரி: புதுச்சேரி காங்., கட்சியினர் வரும் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை துவங்கும் வகையில், ஆளும் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசை கண்டித்தும், ஊழலை மக்களுக்கு விளக்கும் வகையில், தொகுதி தோறும், மக்களை சந்தித்து பாதயாத்திரை பிரசாரம், கடந்த 21ம் தேதி, முத்தியால்பேட்டையில் துவக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, ராஜ்பவன், காமராஜர் நகர், தட்டாஞ்சாவடி மற்றும் லாஸ்பேட்டை தொகுதிகளில் பாதயாத்திரை பிரசாரம் நடந்தது. நேற்று 4வது நாளாக, நெல்லித்தோப்பு தொகுதியில் பாதயாத்திரை பிரசாரம் நடந்தது. இதில், வைத்திலிங்கம் எம்.பி., தலைமையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். பாதயாத்திரையில், பா.ஜ., அரசின் ஓட்டு திருட்டை கண்டித்தும், போலி மருந்து முறைகேடு குறித்தும் துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை