உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மதுபான தொழிற்சாலை அனுமதி விவகாரம் காங்., வெளிநடப்பு: தி.மு.க., மவுனம்

மதுபான தொழிற்சாலை அனுமதி விவகாரம் காங்., வெளிநடப்பு: தி.மு.க., மவுனம்

புதுச்சேரி: மதுபான தொழிற்சாலை விவகாரத்தில் காங்., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.பட்ஜெட் தாக்கல் செய்த முதல்வர் ரங்கசாமி மாநில வருவாயை பெருக்கவே புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதிக்கப்பட்டது. இதன் மூலம் 5 ஆயிரம் பெண்களுக்கு வேலை கிடைக்கும் என அறிவித்தார்.இந்த அறிவிப்பின்போது காங்., - தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனமாக இருந்தனர். ஆனால் காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி புதிய மதுபான தொழிற்சாலைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இது தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, புதிய மதுபான தொழிற்சாலை அனுமதியை காங்., எதிர்க்கிறது. சட்டசபையில் காங்., எம்.எல்.ஏ.,க்கள் புதிய மதுபான தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள்' என்றார்.அவர் கூறியதை போன்றே சட்டசபையில் பூஜ்ய நேரம் முடிந்ததும் காங்., எம்.எல்.ஏ., வைத்தியநாதன் எழுந்து பேசினார். அவர் பேசும்போது, புதுச்சேரி புதிதாக மதுபான ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இதற்கு கவர்னர் அனுமதி வழங்கக்கூடாது. மதுபான ஆலைக்கு அனுமதி வழங்குவதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் எனக்கூறி வெளியேறினார்.அவருடன் மற்றொரு காங்., எம்.எல்.ஏ., ரமேஷ் பரம்பத்தும் வெளி நடப்பு செய்தனர். அதேநேரத்தில் சபையில் இருந்த தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் 6 பேரும் அமைதியாக இருந்தனர். வெளிநடப்பு செய்யவில்லை. இதன் மூலம் மதுபான தொழிற்சாலை விவகாரத்தில் தி.மு.க., - காங்., இடையே கொள்கை ரீதியில் உரசல் ஏற்பட்டுள்ளது மீண்டும் வெளிச்சமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி