உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராமர் கோவில் பிரதிஷ்டை; பிரதமருக்கு முதல்வர் நன்றி

ராமர் கோவில் பிரதிஷ்டை; பிரதமருக்கு முதல்வர் நன்றி

புதுச்சேரி : அயோத்தியில் நடந்த ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவிற்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடிக்கு, புதுச்சேரி முதல்வர் கடிதம் அனுப்பி உள்ளார்.கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:அயோத்தியில், ராம் லல்லா பிராண பிரதிஷ்டை மாபெரும் வெற்றி அடைந்ததற்காக, பிரதமருக்கு முதலில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். கடந்த, 22ம் தேதி, அயோத்தியில் நடந்த வரலாற்று நிகழ்வில், மில்லியன் கணக்கான இந்தியர் களின் இதயங்கள், மகிழ்ச்சியாலும், பக்தியா லும் நிறைந்திருந்ததை உணர முடிந்தது.ராமரை வணங்கிய கரங்கள் பிரதமரை நன்றியுடன் வணங்குவதை காண முடிந்தது. பகவான் ராமரை போலவே, பிரதமரின் மனிதநேயம் மற்றும் தார்மீக ஒருமைப்பாட்டிற்கான சேவையில் ஈடு இணையற்றது. பகவான் ராமர் அனைத்து சவால்களுக்கும் எதிராக உறுதியாக நின்று, தனது வாழ்க்கையை நிலத்திற்கும் உயிர்களுக்கும் சேவை செய்ய அர்ப்பணித்தார்.பகவான் ராமரின் பாதச் சுவட்டில், நீங்கள் தொடர்ந்து, அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்கிறீர்கள். தேசம் உங்களை எப்போதும் நினைவில் வைத்திருக்கும். பிரதமருக்கு புதுச்சேரி மக்கள் சார்பிலும், எனது சார்பிலும் நன்றி தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இவ்வாறு கடிதத்தில், தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை