உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ​ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி

​ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி

புதுச்சேரி: முத்திரையர்பாளையத்தில் ஆரம்ப சுகாதார மையம், சாலை தடுப்புச் சுவர் அமைக்கும் பணியினை அரசு கொறடா ஆறுமுகம் பூஜை செய்து துவக்கி வைத்தார். உழவர்கரை நகராட்சி மூலம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.26. 87 லட்சம் மதிப்பீட்டில் இந்திரா நகர் தொகுதி, முத்திரையர்பாளையத்தில் ஆரம்ப சுகாதார மையம், தனபாலன் நகர் விரிவு பகுதி யில் சாலை தடுப்புச்சுவர் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, அரசு கொறடா ஆறுமுகம் தலைமை தாங்கி, பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இதில், ஆணையர் சுரேஷ்ராஜ், செயற்பொறியாளர் மலைவாசன், உதவி பொறியாளர் கலிவரதன், இளநிலைப் பொறியாளர் முத்தையன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை