உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் மல்லி கிலோ ரூ.2,000-க்கு விற்பனை

புதுச்சேரியில் மல்லி கிலோ ரூ.2,000-க்கு விற்பனை

புதுச்சேரி: புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் மல்லி ஒரு கிலோ ரூ.2000-க்கு விற்பனை செய்யப்பட்டது. புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் மல்லி ஒரு கிலோ ரூ. 1,600 முதல் ரூ.2,000 வரை விற்பனையானது. அரும்பு கிலோ ரூ.900 முதல் ரூ.1,000 வரையும், கனகாம்புரம் கிலோ ரூ. 600 முதல் ரூ. 800 வரையும், சாக்லெட் ரோஜா கிலோ ரூ. 280-க்கும், பன்னீர் ரோஜா ரூ. 160 முதல் ரூ.200 வரையும், சாமந்தி கிலோ ரூ. 80 முதல் ரூ.120 வரையும் விற்பனையானது. ஒரு டன்னுக்கு மேல் மல்லி வரத்து இருந்த நிலையில், தற்போது சீசன் முடிவடைந்ததால் 10 முதல் 20 கிலோ வரை மட்டுமே வருவதால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என, பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை