உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கைவினை கலைஞர்கள் கவர்னருக்கு நன்றி

 கைவினை கலைஞர்கள் கவர்னருக்கு நன்றி

புதுச்சேரி: புதுச்சேரி கைவினை கலைஞர்கள் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து நன்றி தெரிவித்தனர். புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த கைவினை கலைஞர்களுக்கு 27 ஆண்டுகளுக்குப் பிறகு மாநில அளவிலான விருதுகள் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தேசிய விருது பெற்ற கைவினை கலைஞர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் ஊக்கத்தொகை, மூத்த கைவினை கலைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை உயர்த்தி வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதையொட்டி, பத்மஸ்ரீ விருதாளர் முனுசாமி தலைமையில், தேசிய விருதாளர்கள் சேகர், மோகன் தாஸ் உள்ளிட்ட கைவினை கலைஞர்கள், மக்கள் மாளிகையில் கவர்னர் கைலாஷ்நாதனை நேற்று சந்தித்து பேசினர். மாநில அளவிலான விருது வழங்க உத்தரவிட்டதற்காக கவர்னருக்கு நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ