உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கிரைம் செய்திகள்: புதுச்சேரி

கிரைம் செய்திகள்: புதுச்சேரி

மது அருந்திய 3 பேர் கைது டி. நகர் ஏட்டு பாலமோகன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு இ.சி.ஆரில் ரோந்து சென்றனர். ஏர்போர்ட் சாலை சந்திப்பில் உள்ள தனியார் ஓட்டல் அருகில், பொது இடத்தில் மது அருந்திய புதுச்சேரி சதீஷ்,31; சென்னை பெரம்பூர் வியாலி,37; லாஸ்பேட்டை கார்த்திக்,28 ஆகியோரை கைது செய்தனர். நபர் கைது: ரெட்டியார்பாளையம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரதாபன் மூலகுளம் வில்லியனுார் மெயின்ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜெ.ஜெ. நகர் ஆர்ச் பகுதியில், மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட மூலகுளம் தணிகாசலம்,46; என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !