மேலும் செய்திகள்
கத்தியை காட்டி மிரட்டிய இரண்டு வாலிபர்கள் கைது
29-Sep-2026
கருவடிக்குப்பம் மேஜர் சரவணன் நகர் பகுதியல் நேற்று முன்தினம் லாஸ்பேட்டை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர் அப்போது அங்கு பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய லாஸ்பேட்டை விக்னேஸ்வரன், 27; சாமிப்பிள்ளைதோட்டம் சந்திப்பில் லாஸ்பேட்டை சுதர்ஷன், 23; பாலமுருகன், 18; காமராஜர் மணி மண்டபம் அருகே லாஸ்பேட்டை தமிழ்மணி, 24; பகத்சிங் நகர் வராகி அம்மன் கோவில் அருகே லாஸ்பேட்டை அரவிந்த் ஆகிய 5 பேரை லாஸ்பேட்டை போலீசார் கைது செய்தனர். போதை ஆசாமி கைது
சேதராப்பட்டு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் நேற்று முன்தினம் தொழிற்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட, வானுார் தாலுகா, மகேஷ்பிரபு, 39; என்பவரை கைது செய்தனர். வாலிபரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
சேதராப்பட்டு திடீர் நகரை சேர்ந்தவர் கோபிநாத், 39; அதே பகுதியை சேர்ந்த முத்து, தொல்காப்பியன் ஆகியோர், கோபிநாத்தை ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளனர். இது குறித்து கோபிநாத் கொடுத்த புகாரின் பேரில் சேதராப்பட்ட போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். முன்விரோத தகராறு: ஒருவர் மீது வழக்கு
கனகசெட்டிக்குளம் புது நகரை சேர்ந்தவர் கணசேன் மகன் வேதகிரி, 25; இவரை அதே பகுதியை சேர்ந்த பிரதீப் முன்விரோதம் காரணமாக ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். அனுமதியின்றி பேனர்: போலீசார் வழக்கு
சாரம் காமராஜ் சாலை, லெனின் வீதி சந்திப்பில், அனுமதியின்றி மர்ம நபர்கள் டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர். இது குறித்து பொதுப்பணித்து துறை உதவி பொறியாளர் நமச்சிவாயம் கொடுத்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். சூதாடிய 9 பேர் கைது
வில்லியனுார் போலீசார் கணுவாப்பேட்டை சாமியார்தோப்பு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் பணம் வைத்து சூதடிய அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ், 43; வில்லியனுார் ஐய்யப்பன், 28; பூவரசன், 28; கார்த்திகேயன், 28; அன்பரசன், 28; காலிங்கன் மகன் விஜய், 29; சுப்ரமணி மகன் விஜய், 28; கணுவாப்பேட்டை சந்துரு, 25; விமல், 21; ஆகிய 9 பேரை கைது செய்தனர்.
29-Sep-2026