உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பயிர் விளைச்சல் பரிசோதனை

பயிர் விளைச்சல் பரிசோதனை

பாகூர்: புதுச்சேரி மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரியின், இளநிலை இறுதி ஆண்டு மாணவர்கள் கரையாம்புத்துார் கிராமத்தில் ஊரக வேளாண் பயிற்சி முகாம் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சின்ன கரையாம்புத்துார் கிராமத்தில், பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர் வெட்டும் பரிசோதனை நடந்தது. வேளாண் அலுவலர் புவனேஸ்வரி முன்னிலையில் நடந்த பரிசோதனையில்,பயிர் காப்பீட்டு கோரிக்கை பெறுவதற்கும்,பயிர் விளைச்சல் மதிப்பீடுக்காகவும் பரிசோதனை மேற்கொண்டனர். சோதனை முடிவுகளை பயிர் வெட்டும் பரிசோதனை செயலியில் பதிவேற்றம் செய்தனர். இதில் மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை