உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மீன், இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம்

மீன், இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம்

புதுச்சேரி: புரட்டாசி சனிக்கிழமைகள் முடிந்த நிலையில் மீன், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது.ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.இந்த நாட்களில் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடுவதில்லை.இந்நிலையில்,புரட்டாசி மாதம் முடிய உள்ள நிலையில் கடைசி சனிக்கிழமை நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதனால், சனிக்கிழமைகளில் விரதம் முடித்தவர்கள் நேற்று விடுமுறை நாள் என்பதால் இறைச்சி வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.இதன் காரணமாக, புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் உள்ள மீன் மார்க்கெட், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நேற்று வழக்கத்தை விடமீன் மற்றும் இறைச்சிகளின் விலையும் சற்று அதிகரித்து காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை