மேலும் செய்திகள்
மக்கள் மன்றம் நிகழ்ச்சி
27-Jul-2025
புதுச்சேரி, : புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் எஸ்.பி., பாஸ்கரன் தலைமையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடந்தது. இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். இதில், 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று தங்களுடைய புகார் மற்றும் குறைகளை தெரிவித்தனர். தொடர்ந்து, பொதுமக்கள் தவறவிட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான 15 மொபைல் போன்கள் கண்டு பிடிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. எஸ்.பி., பாஸ்கரன் கூறுகையில், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் புதிய ஐ.டி அல்லது புதிய எண்ணில் இருந்து உங்களுக்கு தெரிந்தவர்களின் புகைப்படத்தை டி.பி.,யாக வைத்து, அவசரமாக மருத்துவ தேவைக்கு பணம் அனுப்புமாறு கூறினால், அதை நம்ப வேண்டாம். புகைப்படத்தில் உள்ள நபரின் உண்மையான மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மொத்த வியாபாரம் செய்யும் வியாபாரிகளை அறிமுகம் இல்லாத நபர்கள் தொடர்பு கொண்டு, நம்பிக்கை தரும்படி பேசி அவர்கள் ஆர்டர் செய்யும் பொருளை அனுப்புமாறும், பின் அதற்குண்டான தொகையை அனுப்பி விடுவதாக உறுதி அளித்தால், அதனை நம்பி பொருட்களை அனுப்ப வேண்டாம் என, விழிப்புணர்வு ஏற்படுத்தினாார். மேலும், சைபர் குற்றம் சம்பந்தமாக புகார் அளிக்க 1930, 0413 - 2276144, 9489205246 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
27-Jul-2025