மேலும் செய்திகள்
சைபர் கிரைம் விழிப்புணர்வு
17-Oct-2025
புதுச்சேரி: விவேகானந்தா கல்வியியல் கல்லுாரியில் சைபர் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லுாரி கருத்தரங்கூடத்தில் நடந்தது. கல்லுாரி முதல்வர் சிங்காரவேலு தலைமை தாங்கினார். உதவிப் பேராசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார். சிறப்பு அழைப்பளராக சைபர் க்ரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் அறிவுறுத்தலின்படி, சைபர் கிரைம் போலீசார் ரோஸ்லின் மேரி, வைத்தியநாதன், வெங்கடேஷ், மேரி கிறிஸ்டினா தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர். இதில் சைபர் குற்றவாளிகள் பயனர்களை ஏமாற்ற சமூக ஊடகங்கள் மற்றும் நிதி தளங்களை எவ்வாறு தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும், வலுவான கடவுச் சொற்கள், தனியுரிமை அமைப்புகள் மற்றும் பொறுப்பான ஆன்லைன் நடத்தையின் முக்கியத்துவம் குறித்து பேசினர். தொடர்ந்து சைபர் குற்றங்கள் குறித்த மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர். கல்லுாரி முதல்வர் சிங்காரவேலு பேசுகையில், இணையத்தைப் பயன்படுத்தும் போது அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவும். தேவையற்ற இணைப்புகளை தொடர்வதற்கு முன் சிந்திக்க வேண்டும். சைபர் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வுதான் சிறந்த பாதுகாப்பு என்றார். நிகழ்ச்சியில் கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
17-Oct-2025