உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின் கோபுரத்தில் செடி கொடிகளால் விபத்து அபாயம்

மின் கோபுரத்தில் செடி கொடிகளால் விபத்து அபாயம்

பாகூர் : காட்டுக்குப்பம் துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள, உயர் மின்னழுத்த கோபுரத்தில், செடிகள் படர்ந்துள்ளதால், மின் விபத்து அபாயம் உள்ளது.புதுச்சேரி - கடலுார் சாலை காட்டுக்குப்பத்தில் துணை மின் நிலையம் உள்ளது. இங்கிருந்து, பாகூர், சேலியமேடு, காட்டுக்குப்பம், கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம், தவளக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர்கள் உள்ளிட்ட மின் சாதனங்கள் புதுப்பிக்கப்படாமல், பராமரிப்பு இன்றி உள்ளதால், அடிக்கடி பழுதடைந்து மின் தடை ஏற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.இந்நிலையில், துணை மின்நிலைய வளாகத்தில் உள்ள சுமார் 100 அடி உயரமுள்ள உயர் மின்னழுத்த கோபுரம் ஒன்றில், செடி கொடிகள் வளர்ந்து நடந்து ஆக்கிரமித்துள்ளது. இதனை பார்க்கும் போது மின் நிலையத்தில் பராமரிப்பு பணி என்பது எந்த நிலையில் இருக்கிறது என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. உயர் மின் கோபுரத்தில் படந்துள்ள செடி கொடிகள் மின் நிலைய அதிகாரிகளின் கண்களுக்கு தெரியவில்லையா என்ற கேள்வி எழுகிறது.எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காட்டுக்குப்பம் துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள உயர் மின் கோபுரத்தில் படர்ந்திருக்கும் செடி கொடிகளை அப்புறப்படுத்திட மின்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை