மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
11 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
11 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
11 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
11 hour(s) ago
புதுச்சேரி : மகள் இறந்ததால் அவருக்கு வரதட்சனையாக கொடுத்த நகைகளை திருப்பிக்கேட்ட மாமனாரை தாக்கி கொலை மிரட்டில் விடுத்த மருமகன் உள்ளிட்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி லாஸ்பேட்டை மகாவீர் நகரைச் சேர்ந்தவர் கந்தவேலு 61, இவர் தனது மகள் சூர்யாவை ரெட்டியார்பாளையம் ரத்னா நகரில் வசிக்கும் விக்னேஷ் என்பவருக்கு கடந்த டிசம்பர் 2018 ம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்தார்.திருமணத்தின் போது 50 சவரன் தங்க நகை, பல லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் வாங்கிக்கொடுத்தார். இந்நிலையில் விக்னேஷ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.இதனை தட்டிக்கேட்ட சூர்யாவை மலடி என கூறி விக்னேஷ் தந்தை உத்திராஜன், தாய் சசிகலா ஆகியோர் சித்ரவதை செய்துள்ளனர்.இந்நிலையில் சூர்யாவுக்கு கடந்த 2022ம் ஆண்டு சிகிச்சைக்கு பிறகு பெண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு சூர்யாவை விக்னேஷ் மற்றும் அவரது பெற்றோர்கள் தொடர் சித்தரவதை செய்துவந்தனர்.இதனால் சூர்யா உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்தார். சூர்யாவிற்கு முறையான சிகிச்சை அளிக்காததால் சூர்யா கடந்த ஜூலை 5ம் தேதி இறந்தார்.இதன் பின் சூர்யானின் திருமணத்தின் போது கொடுத்த நகைகளை கந்தவேலு கேட்டபோது, விக்னேஷ், அவரது தந்தை உத்திரராஜன் ஆகியோர் ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.கந்தவேலு புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் விக்னேஷ் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago