உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி கவுரவிக்க முடிவு

உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி கவுரவிக்க முடிவு

புதுச்சேரி: மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு, இறுதி அஞ்சலி செலுத்தி கவுரவிக்க, புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.தமிழகத்தைப்போல், புதுச்சேரியிலும் உடல் உறுப்பு தானம் செய்யபவர்களை கவுரவிக்க புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக, வழிகாட்டுதல் நெறிமுறைகளை சுகாதாரத் துறை வகுத்து வெளியிட்டுள்ளது. இதற்கான உத்தரவினை, சுகாதார துறை சார்பு செயலர் முருகேசன் பிறப்பித்துள்ளார்.அதன் முக்கிய அம்சங்கள்: புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மூளைச்சாவு அடைந்து, உறவினர்கள் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வந்தால், உடனடியாக அந்த மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் உள்ள கலெக்டருக்கும், ஏனாம், மாகி பிராந்தியங்களில் மண்டல நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள், உடனடியாக புதுச்சேரி அரசின் சார்பில் உறுப்பு தானம் செய்தவரது உடலுக்கு மரியாதை செலுத்துவர்.ஒருவேளை, அரசு சார்பில் பிரதிநிதியாக கலெக்டர் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அடுத்த நிலையில் உள்ள சப் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள், உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு, அவரது வீட்டில் மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்துவார். இதற்கான ஏற்பாடுகளை செய்தி விளம்பரத் துறை செய்ய வேண்டும்.மூளைச்சாவு அடைந்து, உடல் உறுப்பு செய்தவரின் புகைப்படத்துடன், அவர்களது தியாகத்தை மக்களின் பார்வைக்கு, செய்தி விளம்பர துறை வாயிலாக வெளியிட வேண்டும். உடல் உறுப்பு தானம் செய்தவர் பிற மாநிலங்களை சேர்ந்தவராக இருந்தால், அந்த மாவட்ட கலெக்டருக்கும், நோடல் அதிகாரிக்கும் தகவல் தெரிவித்து, இறுதி மரியாதை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இறுதி அஞ்சலி மட்டுமின்றி, சுதந்திர தினம் உள்ளிட்ட முக்கிய அரசு விழாக்களிலும், உடல் தானம் செய்தவர்களின் குடும்பங்களை கவுரவிக்க அரசு முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை