உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பசுமை பரப்பை அதிகரிக்க வருகிறது தெய்வ வனம் வனத்துறை புதிய முயற்சி

பசுமை பரப்பை அதிகரிக்க வருகிறது தெய்வ வனம் வனத்துறை புதிய முயற்சி

மனித இனம் தோன்றுவதற்கு முன் தோன்றிய ஒற்றைச் செல் உயிரிகளே தாவரங்களாகவும், விலங்குகளாகவும் பூமியில் பரிணமித்தன. அதன்பின்னர் தோன்றிய மனிதன் நீர், நிலம், சூரியன், காற்று, விலங்கு மற்றும் மரங்களை இயற்கை தெய்வங்களாக வணங்கி வழிபட்டு வந்தான். இதனால் சுற்றுச்சூழல் மாசடையாமல் காக்கப்பட்டது.காலப்போக்கில் மனிதர்கள், தங்கள் சுய நலத்திற்காக இயற்கை வளங்களை அழித்ததன் விளைவாக சுற்றுச்சூழல் மாசடைந்து வருகிறது. இதனை தவிர்க்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறது.அதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் பசுமை வனப்பரப்பை அதிகரிக்க, வனத்துறை 'தெய்வ வனம்' என்ற பெயரில் மரம் வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்த தயாராகி வருகிறது.இத்திட்டத்தில், புதுச்சேரியில் உள்ள கோவில்களில் சிறிய அளவில் நர்சரி அமைக்கும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களுடைய ராசி மற்றும் நட்சத்திரங்களுக்கு உகந்த மரங்கன்றுகளை இலவசமாக எடுத்துச் சென்று தங்களுக்கு பிடித்த இடங்களில் நட்டு வளர்க்கலாம்.இதேபோன்று கிறிஸ்தவ ஆலயம் மற்றும் மசூதிகளில் நடக்கும் திருவிழா நாட்களில் அவர்களின் அனுமதியுடன் 'தெய்வ வனம்' திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த கவர்னர், முதல்வர், வனத்துறை அமைச்சர் மற்றும் தலைமை செயலர் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.அதனையொட்டி, வன பாதுகாவலர் அருள்ராஜ் இதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை