உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  டெங்கு, சிக்குன் குனியா குறித்த விழிப்புணர்வு வாகன பிரசாரம்

 டெங்கு, சிக்குன் குனியா குறித்த விழிப்புணர்வு வாகன பிரசாரம்

புதுச்சேரி: டெங்கு மற்றும் சிக்குன் குனியா குறித்த விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை, சுகாதார துறை இயக்குனர் செவ்வேள் துவக்கி வைத்தார். புதுச்சேரி சுகாதாரம் மற்றும் நலவழித் துறை சார்பில், டெங்கு மற்றும் சிக்குன் குனியா குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பொது மக்கள் கூடும் இடங்களில் லைட்டிங் பேனர் பொருத்தப்பட்ட வாகனம் மூலமாக மைக் பிரசாரம் செய்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் துவக்க நிகழ்ச்சி, சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் எதிரே நடந்தது. நிகழ்ச்சிக்கு, தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். நலவழித் துறை இயக்குனர் செவ்வேள் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், துணை இயக்குநர்கள் (பொது சுகாதார பிரிவு) சமீமுனிசா பேகம், (குடும்ப நலம்) ஆனந்தலட்சுமி, (தடுப்பூசி பிரிவு) உமாசங்கர், யானைக்கால் நோய் தடுப்பு மற்றும் மலேரியா தடுப்பு பிரிவு உதவி இயக்குனர் முருகன் மற்றும் திட்ட அலுவலர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, துணை இயக்குநர் ரகுநாதன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

M Ramachandran
நவ 14, 2025 01:32

டெங்கு, சிக்குன் குனியா குறித்த விவரம் இளவரசருக்கு தான் முன் அனுபவம் அதிகம் அவரைய்ய கேட்டால் நான் தான் உண்மையான கிறுக்கு பிடித்த கிருத்துவன் என்று விவரம் சொல்லுவார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை