அசோலா வளர்ப்பு செய்முறை விளக்கம்
புதுச்சேரி: மணக்குள விநாயகர் வேளாண்மை கல்லுாரி மாணவர்கள் ஏம்பலம் – புதுக்குப்பம் பகுதி விவசாயிகளுக்கு அசோலா வளர்ப்பு குறித்துசெய்முறை விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சியில், கல்லுாரி டீன் முகமது யாசின், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராவ் கெலுஸ்கர், திட்ட அலுவலர் திருமலை ஆகியோரின் மேற்பார்வையில், கல்லுாரி மாணவிகள் ஹேமமாலினி, ஹேமவர்த்தனி, ஜெய நேர்த்திக்கா, ஜெயதேவி, ஜீவா, ஜீவப்பிரியா, ஜெதிகா, காவியாஸ்ரீ, கமலி, கானுாரி நவ்ய ஸ்ரீ ஆகியோர் விவசாயிகளுக்கு அசோலா வளர்ப்பு முறை குறித்து பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் ஏம்பலம், புதுக்குப்பம் கிராம விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.