உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேஷ்கா பிரகிருதி பரிக் ஷன் அபியான் திட்டம் மக்களின் உடல் நல தகவல்கள் பதிவேற்றம்

தேஷ்கா பிரகிருதி பரிக் ஷன் அபியான் திட்டம் மக்களின் உடல் நல தகவல்கள் பதிவேற்றம்

புதுச்சேரி: மத்திய அரசின் 'மனம், உடல் அமைப்பு' திட்டத்தை உலக சாதனையாக்காக, ஆயுர்வேத மருத்துவ கல்லுாரி மாணவர்கள் புதுச்சேரி பொது மக்களின் உடல் நல தகவல்களை மொபைல் செயலியில் பதிவு செய்து வருகின்றனர்.மத்திய ஆயுஷ் அமைச்சகத்தால் 'தேஷ் கா பிரகிருதி பரிக் ஷன் அபியான்' (மனம், உடல் அமைப்பு) என்ற ஆரோக்கிய திட்டத்தை துவக்கியுள்ளது. இத்திட்டத்தில், நாடு முழுதும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களின் உடல் ஆரோக்கியத்தை ஆயுர்வேத முறையில் மேம்படுத்தும் வகையில் சிறப்பு செயலி மற்றும் வெப்சைட் வெளியிடப்பட்டுள்ளது.இப்பணியில் நாடு முழுதும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட தன்னார்வலர்களை ஆயுஷ் அமைச்சகம் ஈடுபடுத்தி உள்ளது. வீடுகள், கல்லுாரிகள், வணிக நிறுவனங்களுக்கு செல்லும் தன்னார்வலர்கள் அங்கு உள்ளவர்களின் மொபைல் போன்களில் சிறப்பு செயலியை பதிவிறக்கம் செய்து, அவர்களின் கண், பல், நாக்கு, உடல் எடை, உடல்நல பிரச்னைகளை கேட்டறிந்து பதிவு செய்கின்றனர்.இதன் மூலம் சம்பந்தப்பட்ட நபருக்கு ஆயுர்வேத மருத்துவ வழிகாட்டல்கள் வழங்கப்படும். பதிவு செய்த நபருக்கு ஆயுஷ் அமைச்சகத்தின் சான்றிதழ் மொபைலில் வழங்கப்படுகிறது.நாடு முழுதும் உள்ள மக்களின் உடல் மற்றும் மன நல ஆரோக்கியத்தை இந்த ஆயுர்வேத திட்டத்தின் மூலம் மேம்படுத்தி இதனை உலக சாதனையாக பதிவு செய்ய ஆயுஷ் அமைச்சகம் முடிவு செய்துள்ளது.இத்திட்டத்தின் கீழ் பொது மக்களின் உடல் நல பிரச்னைகளை மொபைல் செயலியில் பதிவு செய்யும் பணியில் புதுச்சேரி, மாகியில் உள்ள ஆயுர்வேத மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 10 ஆயிரம் பேரை பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை