மேலும் செய்திகள்
ஆடியில் மண் குளிர்ந்தது போல மனம் குளிரணும் தாயே!
26-Jul-2025
பாகூர் : கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். புதுச்சேரி - கடலுார் சாலை, கன்னியக்கோவிலில் மன்னாதீஸ்வரர் உடனுறை பச்சைவாழி அம்மன் கோவில் உள்ளது. இக்கோயில் தீமிதி திருவிழா கடந்த 31ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்து வந்தது. முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 12:00 மணிக்கு வள்ளி, தெய்வானை, முருகர் திருகல்யாண உற்சவம் நடந்தது. மாலை 6:00 மணியளவில் தீமிதி விழா நடைபெற்றது. புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவில், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், லட்சுமிகாந்தன் உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி புதுச்சேரி - கடலுார் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மாறன் மற்றும் விழாக்குழுவினர், இளைஞர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.
26-Jul-2025