உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஒரு லட்சம் பேருக்கு டயாலிசிஸ்

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஒரு லட்சம் பேருக்கு டயாலிசிஸ்

இந்தியாவில் பழமை வாய்ந்த மருத்துவமனைகளில் ஒன்றாக திகழும் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை 203 ஆண்டுகளாக புதுச்சேரி மக்களுக்கு மருத்துவ சேவையாற்றி வருகிறது. இதில், 1988ம் ஆண்டு டாக்டர் முருகேசன் தலைமையில் ஒரே ஒரு டயாலிசிஸ் மெஷின் செயல்பட தொடங்கிய சிறுநீரகவியல் பிரிவு இன்று 20 மிஷின்களுடன் மூன்று ஷிப்ட் முறையில் சிறுநீரகவியல் துறை தலைவர் டாக்டர் குமார் தலைமையில் தினசரி 40 பேருக்கு இலவசமாக டயாலிசிஸ் செய்யப்படுகிறது.இதனால் ஆண்டுக்கு பத்தாயிரம் பேர் பயனடைந்துள்ளனர். அதைத்தொடர்ந்து இதுவரை டயாலிசிஸ் செய்யப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த வாரம் ஒரு லட்சம் பேர் என்ற மைல் கல்லை இந்திரா காந்தி அரசு மருத்துவமனை எட்டியுள்ளது.மேலும் 30 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி டயாலிசிஸ் சிகிச்சையை மேற்கொள்ளும் பட்டய படிப்பினை அளிப்பதால், இதில் 200 மாணவர்கள் படித்துள்ளனர். இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த புதுச்சேரி கவர்னர், முதல்வர் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர், உள்ளிட்ட அனைவருக்கும் சிறுநீரகவியல் பிரிவு சார்பில் நன்றி தெரிவிப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ