உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நள்ளிரவில் டி.ஐ.ஜி., ஆய்வு

நள்ளிரவில் டி.ஐ.ஜி., ஆய்வு

புதுச்சேரி : புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு குறித்து டி.ஐ.ஜி., சத்யசுந்தரம் நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டார். புதுச்சேரி ரெயின்போ நகரில் கடந்த 13ந் தேதி பிரபல தாதா மகன் ரஷி உள்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.இந்த சம்பவம் புதுச்சேரி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. மேலும் சிறுமி விவகாரம், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்ந்து நடந்தது. இந்நிலையில் புதுச்சேரி போலீஸ் டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம் நேற்று நள்ளிரவு நகர் முழுவதும் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, புதுச்சேரி சட்டம்- ஒழுங்கு போலீசார், குற்றப்பிரிவு போலீசார், அதிரடிப்படை போலீசார் ஆகியோருக்கு பல்வேறு ஆலோசனை வழங்கினார். ஆய்வின்போது புதுச்சேரி சட்டம்-ஒழுங்கு சீனியர் எஸ்.பி., (பொ) நாரா.சைதன்யா, கிழக்குப்பகுதி போலீஸ் எஸ்.பி., ரகுநாயகம் மற்றும் போலீசார் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை